என்னை மறவா இயேசுநாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
1.
வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமதே – என்னை
2.
பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை – என்னை
3.
தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே – என்னை
4.
உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே – என்னை
5.
என்னை முற்றும் ஒப்புவித்தேன்
ஏற்று என்றும் நடத்துவரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடும் – என்னை
ennai marava iyesu natha
unthdhan dhayaval ennai nadaththum
1.
valla jeeva vakkuthdhathdhangkal
varainththenakkay dhanthdhathale sthoththiram
aapaththile arum thunaiye
pathaikku nalla dheepamathe – ennai
2.
payabpadathe valakkaraththale
pathukabben enrathale sthoththiram
basam enmel neer vaithdhathinal
parikka iyalathevarumennai – ennai
3.
thay dhan seyai maranththu viddalum
maraven unnai enrathale sthoththiram
varainthdharanro um ullangkaiyil
unnatha enthdhan pukalitame – ennai
4.
unnaith thoduven en kanmaniyaith
thoduvathaka uraithdhathale sathoththiram
akkiniyin mathilaka
anpare ennaik kaththidume – ennai
5.
ennai mutrrum oppuviththen
eerru endrum nataththuvare sathoththiram
ebpadiyum um varukaiyile
eezhai ennais serththidum – ennai